பெங்களூரு,ஜன.16- ககன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் (இஸ்ரோ) மேற்கொண்டு வரு கிறது. இத்திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிடப் பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தத் திட்டமிடப் பட்டுள்ள ககன்யான் திட்டத் திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வு செய்யப் பட்ட 4 பேருக்கும் ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மாதத்தில் ரஷ்யா செல்லும் அவர்களுக்கு 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.